சிவராச அனோஜன் வழக்கு - மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கவலை
#Death
#Tamil
#Muslim
#LANKA4
#SaudiArabia
#sanakkiyan
#penalty
#SriLankan
#L4
Prasu
1 hour ago
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை பிரஜையான சிவராச அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும் கவலையை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், அவரது உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இவ்வழக்கை வெளிவிவகார அமைச்சு கையாண்ட விதம் மற்றும் மேன்முறையீட்டுச் செயல்முறை தொடர்பான தூதரகப் பொறுப்புக்கூறல் குறித்து கேள்வி எழுப்புவதோடு, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இவ்விடயத்தை முன்வைக்கவுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.