அனோஜனின் வழக்கு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு சிறப்பு கவனம்
#SriLanka
#SaudiArabia
#foreign
#Ministry
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 hours ago
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அமைச்சின் தகவலின்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கு தொடர்பான நிகழ்வுகளைக் கண்காணிப்பதோடு, கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகளில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கை நாட்டவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.