கூகுளின் ‘ஜெமினி’ AI சோதனையின்போது பிற இணையதளங்களுக்குள் ஊடுருவல்!

#Accident #world_news #LANKA4 #google #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
4 hours ago
கூகுளின் ‘ஜெமினி’ AI சோதனையின்போது பிற இணையதளங்களுக்குள் ஊடுருவல்!

கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ (Gemini) செயற்கை நுண்ணறிவு மாதிரி, தனது பாதுகாப்புத் திறனை ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்ட சோதனையின்போது, தன்னிச்சையாக இணையத்தைப் பயன்படுத்தி பிற நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் அணுகியுள்ளது.

கடந்த மே மாதம் ‘இர்ரெகுலர்’ (Irregular) என்ற சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய சோதனையின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் கிடைத்த தகவல்கள், யூகிக்கப்பட்ட கடவுச்சொற்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, சோதனையின் எல்லைக்குள் இருப்பதாகத் தவறாகக் கருதி மூன்று இணையதளங்களை ஜெமினி அணுகியுள்ளது.

எனினும், சிறிது நேரத்துக்குப் பின்னர் அந்தச் செயல்பாட்டை ஜெமினி தானாகவே நிறுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சோதனை நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும், சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு முறையான பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!