பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் விஜய்
#India
#Airport
#LANKA4
#Vijay
#ChiefMinister
#Chennai
#NarendraModi
#L4
Prasu
3 hours ago
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
”சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்- நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.