சாதாரண சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றப்படும் அனோஜன் - குடும்ப உறுப்பினர் தகவல்

#SriLanka #Prison #SaudiArabia #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #SivarasaAnojan
Thamilini
3 hours ago
சாதாரண சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு  மாற்றப்படும் அனோஜன் - குடும்ப உறுப்பினர் தகவல்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்த உரையாடலின் போது, தன்னை சாதாரண கைதிகள் தடுத்து வைத்திருக்கும் சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.ஷ

 எனினும், இந்தத் தண்டனை குறித்த அடுத்தக்கட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அனோஜன் தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். 

 இதனிடையே, அனோஜனின் நலனை உறுதிசெய்ய, இராஜதந்திர ரீதியாக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

 அதேபோன்று, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!