முடிந்தவரை முயற்சி செய்கிறோம் - அனோஜன் விடயத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Nalinda Jayatissa
#SivarasaAnojan
Thamilini
1 hour ago
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சவூதி அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளது.
இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, சவூதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.