இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய பிரபல இங்கிலாந்து அணி
இலங்கை அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில், பதும் நிசாங்கா 36 ஓட்டங்களும் கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
தொடர்ந்து இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில், ஜோஸ் பட்லர் 62 ஓட்டங்களும் புரூக் 36 ஓட்டங்களும் குவித்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரையும் கைப்பற்றியது.