நாட்டின் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

#SriLanka #NuwaraEliya #Warning #landslide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டின் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இந்த எச்சரிக்கை இன்று (20) மாலை 7:00 மணி முதல் நாளை மாலை 7:00 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவை விழிப்புடன் இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், காலி மாவட்டத்தில் உள்ள நாகொட பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தனுவர, கண்டி மாவட்டத்தில் உள்ள பஸ்பாகே கோரல, கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரனியகல, மற்றும் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, இரத்தினபுர, குருவிட்ட மற்றும் நிவிதிகல பிரதேச செயலகப் பிரிவுகளும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!