தொடர் மழைவீழ்ச்சியால் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு - வெள்ளம் தொடர்பில் எச்சரிக்கை

#SriLanka #weather #Rain #River #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
தொடர் மழைவீழ்ச்சியால் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு - வெள்ளம் தொடர்பில் எச்சரிக்கை

தொடரும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் சில முக்கிய  ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக களனி ஆற்றின் கிளன்கோர்ஸ் (Glencourse) நிலையத்திலும், நில்வளா ஆற்றின் பனதுகம (Panadugama) நிலையத்திலும் சிறிய அளவிலான வெள்ள நிலைமை பதிவாகியுள்ளது.

ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், பல பகுதிகளில் ஆற்று நீர்மட்டம் "எச்சரிக்கை நிலையை"   எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் கடந்த 12 மணித்தியாலங்களாக  மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிதுல்கலையில் 89.6 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அதேபோல்  நாவலப்பிட்டி (81.9 மி.மீ), கிரியுல்ல (78.4 மி.மீ) மற்றும் தெரணியகல (76.7 மி.மீ) ஆகிய இடங்களிலும் பலத்த மழை பதிவாகியுள்ளது. 

 நீர் மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், ஆறுகளுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!