ஈஸ்டர் தாக்குதல் - 24 பிரதிவாதிகள் மீதான வழக்கு விசாரணைகள் நிறைவு : நாளைய தினம் தீர்ப்பு

#SriLanka #CourtOrder #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஈஸ்டர் தாக்குதல் -  24 பிரதிவாதிகள் மீதான வழக்கு விசாரணைகள் நிறைவு : நாளைய தினம் தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சதி செய்தல் மற்றும் அதற்குத் துணைபுரிதல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகள் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மராசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. 

 நௌஃபர் மவ்லவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், அரச தரப்புக்காக மொத்தம் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

தொடர்ச்சியான விசாரணைகளுக்குப் பிறகு, அரச தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு ஆகிய இரு தரப்பிலும் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 24 அன்று நிறைவடைந்தன. 

 விரிவான விசாரணையை நிறைவு செய்த கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை வழங்குவதற்கான திகதியாக செப்டம்பர் 22-ஐ நிர்ணயித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!