தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

#SriLanka #Accident #vehicle #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கெலானிகம மற்றும் தொடங்கொட சந்தியில், ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 'கேப்' (cab) ரக வாகனம் மீது மோதியதாலும், அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதாலும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் ஆறு கார்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. 

 விபத்தைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 விபத்தைத் தொடர்ந்து, காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களை டொடங்கொட வெளியேறும் வழித்தடத்தின் (exit) ஊடாகச் செல்லுமாறு பொலிஸார் திருப்பிவிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!