அனுராதபுரத்தில் இளைஞர்களை வலுப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ்!
அனுராதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கெப்பித்திகொல்லாவ, அல்லாவ பிரதேசத்திற்கான இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அல்லாவ பிரதேச இளைஞர்களுடனான சந்திப்பாகவும் அமைந்திருந்தது.
ஹொரவப்பொத்தானை தொகுதியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் பாரிஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை, தேசிய இளைஞர் அமைப்பாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப், அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் ரபீக் ஆசிரியர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தலைவரின் அனுராதபுரம் மாவட்ட இணைப்பாளர் நாச்சியாதீவு பர்வீன், அனுராதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பிரதி அமைப்பாளர் ஷெய்க் என்.எம். சாஜித் (நளீமி), கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சீ. சமால்தீன் மற்றும் அனுராதபுரம் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களான மீரா சாஹிப், கே. நளர், எஸ்.எம். சியாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிரதேச இளைஞர்களை கட்சியின் இளைஞர் அமைப்பின் ஊடாக ஒன்றிணைத்து, அவர்களின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.