ரத்மலானையில் புதிய மெட்ரோ டிப்போ – இன்று முதல் சேவை ஆரம்பம்!
#SriLanka
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
#Ratmalana
Abi
1 hour ago
ரத்மலானை மெட்ரோ டிப்போ இன்று (21) முதல் தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது.
நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்காவது மெட்ரோ டிப்போவாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய மெட்ரோ டிப்போ, பயணிகளுக்கு சிறந்த மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை வழங்குவதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்மலானையில் மெட்ரோ டிப்போவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு முன்னேற்றப் படியாகக் கருதப்படுகிறது.