எஸ்வாட்டினிக்கு அனுப்பப்பட்ட இலங்கை ஏதிலி உயிரிழப்பு – பிரித்தானியாவிடம் கேள்விகள்!
#SriLanka
#Death
#LANKA4
#Asylum Seekers
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
1 hour ago
2021ஆம் ஆண்டு டியேகோ கார்சியா தீவுக்கு அருகில் மீட்கப்பட்ட 89 தமிழ் ஏதிலிகளில் ஒருவரான இலங்கையர், சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு எஸ்வாட்டினிக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பு முகாமில் இருந்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பலமுறை உயிர்மாய்ப்புக்கு முயன்றதாகக் கூறப்படும் அவரின் தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து ஐ.நா. ஏதிலிகள் முகவரகமும் கவலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், எஸ்வாட்டினியில் அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பிரித்தானிய FCDO தெரிவித்துள்ளது.