“மண்டாடி” 100 கோடி வசூல் – சூரியின் திரைப்பயணத்தில் புதிய மைல்கல்!
#Cinema
#LANKA4
#soori
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
2 hours ago
அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "மண்டாடி". இந்த திரைப்படம் இராமநாதபுர மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செப். 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான “மண்டாடி” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.