சௌதி அரேபியாவை புறக்கணிக்கிறார்களா இலங்கையர்கள்? வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி என தகவல்!

#SriLanka #LANKA4 #SaudiArabia #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
சௌதி அரேபியாவை புறக்கணிக்கிறார்களா இலங்கையர்கள்? வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி என தகவல்!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் தொடர்பான செய்திகள், அந்நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காகச் செல்ல விரும்பும் இலங்கையர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சவுதி குழுவினருடன் தொடர்புடைய தாக்குதல்கள், ஈரானுடனான பிராந்திய பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள், சவுதி அரேபியாவிற்கு தொழில் புரியச் செல்வது தொடர்பாக பலரையும் மீண்டும் சிந்திக்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அனோஜன் தொடர்பான தண்டனை விவகாரம் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் சட்டங்கள், அங்கு வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய தண்டனைகள் மற்றும் அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில், சவுதி அரேபியாவிற்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் 50% வரை குறைவடைந்திருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!