ஆசனப் பட்டி அணிந்திருந்ததால் பாரிய காயங்கள் தவிர்ப்பு!

#SriLanka #Accident #LANKA4 #Injury #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஆசனப் பட்டி அணிந்திருந்ததால் பாரிய காயங்கள் தவிர்ப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பல வாகன விபத்தில், பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிந்திருந்ததால் பாரிய காயங்கள் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில் இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இரண்டு பேருந்துகள், ஒரு கெப் வாகனம் உள்ளிட்ட 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஆசனப் பட்டிகளை அணிந்திருந்ததாகவும், இதன் காரணமாக அவர்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவித்துள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து எட்டு மாணவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கிய ஏனைய வாகனங்களில் பயணித்தவர்களும் ஆசனப் பட்டிகளை அணிந்திருந்ததால், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் குறைந்ததாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!