சுங்க அதிகாரிகளின் உணவுக்காக ரூ.41 மில்லியன் செலவு – கணக்காய்வில் முறைகேடு அம்பலம்!

#SriLanka #meal #LANKA4 #officer #customs #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
சுங்க அதிகாரிகளின் உணவுக்காக ரூ.41 மில்லியன் செலவு – கணக்காய்வில் முறைகேடு அம்பலம்!

இலங்கை துறைமுகங்களில் பணியாற்றும் சுங்க அதிகாரிகளுக்கான உணவுக்காக, முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் ரூ.41 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுங்கத் தலைமையகத்தில் இயங்கிய உணவகமும் முறையான கொள்முதல் நடைமுறையோ அல்லது செல்லுபடியாகும் ஒப்பந்தமோ இன்றி நீண்டகாலம் நடத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான கணக்காய்வு கேள்விகளுக்கு சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுமார் ஆறு மாதங்கள் பதிலளிக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செலவுகள் ஒழுங்கற்ற பரிவர்த்தனைகளாக கணக்காய்வில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!