சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை – இலங்கை அரசு ராஜதந்திர நடவடிக்கை

#SriLanka #government #LANKA4 #SaudiArabia #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை – இலங்கை அரசு ராஜதந்திர நடவடிக்கை

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜன் என்ற இலங்கைப் பிரஜைக்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில், அனோஜனை அந்நாட்டின் இணையக் குற்றவியல் (Cybercrime) சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், ஷரீஆ (Shariya) சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என சவூதி அரசுத் தரப்பு சட்டத்தரணி மேன்முறையீடு செய்திருந்தார்.

அந்த மேன்முறையீட்டைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ராஜதந்திர தலையீடுகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்ட வல்லுநர்களிடம் சட்ட ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சவூதி மன்னருக்கு அனுப்பப்படும் கடிதத்தைக் கையளிப்பதற்காக, பிரதி சபாநாயகர் தலைமையிலான விசேட குழுவொன்று சவூதி அரேபியா செல்லவுள்ளது.

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது, சவூதி வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து தண்டனையைக் குறைக்குமாறு அல்லது ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அனோஜன் சார்பாக சவூதி அரேபியாவில் ஏற்படும் அனைத்து சட்டச் செலவுகளையும் இலங்கை அரசாங்கமே ஏற்கும் என்றும், இதுவரை அவரது குடும்பத்தினரால் செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் மீள வழங்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!