SLvsENG - இலங்கை அணிக்கு 266 ஓட்டங்கள் இலக்கு
#SriLanka
#LANKA4
#Cricket
#ENGLAND
#ODI
#L4
Prasu
1 hour ago
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், ஹரி புரூக் 67 ஓட்டங்களும் ஜோ ரூட் 44 ஓட்டங்களும் வில் ஜேக்ஸ் 46 ஓட்டங்களும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில், சசிந்து கொலம்பகே 3 விக்கெட்களும் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.