ஈஸ்டர் தாக்குதல் - குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

#SriLanka #CourtOrder #Easter Sunday Attack #LANKA4 #Judge #L4
Prasu
2 hours ago
ஈஸ்டர் தாக்குதல் - குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் 15 பேர் வருமாறு,

1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!