துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு - 11 மாணவர்கள் காயம்
#School
#ARREST
#Hospital
#LANKA4
#GunShoot
#Turkey
#L4
Prasu
2 hours ago
மேற்கு துருக்கியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே பதின்வயது இளைஞன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், துப்பாக்கிதாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்குப் பகுதி சுற்றுலா நகரமான இஸ்மிருக்கு அருகிலுள்ள மனிசா மாகாணத்தின் துர்குட்லுவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பிராந்திய ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் புலனாய்வாளர்களால் சந்தேக நபரின் பெற்றோரும் தாத்தாவும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.