SLvsENG - முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

#SriLanka #LANKA4 #Cricket #ENGLAND #ODI #L4
Prasu
2 hours ago
SLvsENG - முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், ஹரி புரூக் 67 ஓட்டங்களும் ஜோ ரூட் 44 ஓட்டங்களும் வில் ஜேக்ஸ் 46 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணி சார்பில், துனித் வெல்லாலகே 45 ஓட்டங்களும் குசல் மெண்டிஸ் 42 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!