அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது - உறுதியான நிலைப்பாட்டில் எதிர்கட்சி

#SriLanka #Parliament #Sajith Premadasa #Amendment #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Speech
Thamilini
59 minutes ago
அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தம்  ஜனநாயகத்திற்கு விரோதமானது - உறுதியான நிலைப்பாட்டில் எதிர்கட்சி

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், அது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு அரசியலமைப்புத் திருத்தமாகும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (22.09) இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 22ஆம் திருத்தமானது ஒரு அரசியல் அலுகோசு திருத்தமாகும். ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமாகும். 

இதனை ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும், அரசியலமைப்பு ரீதியான சூழ்ச்சி என்றும் அழைக்கலாம். எனவே, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நான் நிராகரிக்கின்றேன்” என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!