அனோஜன் விடயத்தில் சவுதி அரசாங்கத்தை எதிர்தால் பிரச்சினை தீவிரமடையும் - பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டு

#SriLanka #SaudiArabia #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Bimal Ratnayake #SivarasaAnojan
Thamilini
2 hours ago
அனோஜன் விடயத்தில் சவுதி அரசாங்கத்தை எதிர்தால் பிரச்சினை தீவிரமடையும் - பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டு

அனோஜன் விவகாரத்தில் சவூதி அரசாங்கத்தையும், அந்நாட்டின் மரபுகளையும் எதிர்க்கும் வகையில் செயற்பட்டால் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையும். ஆகவே தற்போதைய இக்கட்டான தருணத்தில் மிகவும் அவதானத்துடனும், பொறுமையுடனும் செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை பாதுகாப்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் துரிதகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 

 இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாக குழு ஒன்று சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

இந்த குழுவில் கிழக்கு மாகாணத்தில் மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன். இந்த விடயத்தில் சவூதி இராத்தியத்துக்கும், அவர்களின் மரபுகளுக்கும் எதிராக செயற்பட கூடாது.

 நாடுகள் அனைத்துக்கும் அவர்களுக்கே உரித்தான மரபுகள் மற்றும் கலாசாரங்கள் காணப்படும் அவற்றை மதித்து செயற்பட வேண்டும். தற்போதைய இக்கட்டான நிலையில் இங்கிருந்துக் கொண்டு எதிரான எதிர்ப்புக்களை தெரிவிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

இது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்பதால் மிகவும் அவதானத்துடனும், பொறுமையாகவும் செயற்பட வேண்டும். அனோஜன் விவகாரத்தை கொண்டு அரசியல் செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

இந்த நெருக்கடியான தருணத்தில் எப்படியாவது அந்த இளைஞனின் உயிரை காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்” என்றார். 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!