க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நிதியுதவி -கிளிநொச்சியில் ஆரம்பம்
#SriLanka
#Student
#Kilinochchi
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கவுள்ளது; இதன் முதல் நிகழ்வு செப்டம்பர் 26 அன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பாடப் பிரிவிலிருந்தும் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10இல் இருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவ்வருடம் இலங்கை முழுவதும் சுமார் 3,000 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் 100,000 ரூபா நிதியுதவியுடன், கௌரவிப்புச் சான்றிதழும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.