IMF பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றத்தில் சந்திப்பு

#SriLanka #PrimeMinister #Parliament #LANKA4 #IMF #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
IMF பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றத்தில் சந்திப்பு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழுத் தலைவர் Evan Papageorgiou தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் செப்டெம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்றை நடத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கை முன்னெடுத்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் அனுபவங்கள் மற்றும் இதுவரையான பெறுபேறுகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, இலங்கையின் ஏழாவது மீளாய்வு தொடர்பான விடயங்கள் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டன.

அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

சொத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் (CIABOC) சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், அதேவேளை தேவையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!