நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் 6 நிறுவனங்களை முடக்க உத்தரவு!

#SriLanka #LANKA4 #company #Finance #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் 6 நிறுவனங்களை  முடக்க உத்தரவு!

நிதி வர்த்தகச் சட்டம் இல. 42, 2011 (FBA) இன் கீழ், பொதுமக்களின் நிதி பாதுகாப்பை கருத்திற்கொண்டு, ஆறு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தல், மாற்றுதல் அல்லது வேறு வகையில் கையாளுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி நிறுவனங்களை முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குறித்த உத்தரவுகளை கொழும்பு உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது முடக்க உத்தரவு அமுலில் உள்ள நிறுவனங்கள்:

* Kasagala Green Plantation (Private) Limited

* Ceylon Green Life Plantation (Private) Limited

* Singhe Capital Investment Limited

* Pro Shop Advertising Holdings (Private) Limited

* Athens International Education Centre (Private) Limited

* Eyon Lanka Investment & Film Production International Company (Private) Limited

இவற்றில் முதல் இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் FBA இன் பிரிவு 42 இன் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஏனைய நான்கு நிறுவனங்கள் நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன மற்றும்/அல்லது சட்ட விதிகளுக்கு முரணாக பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது பணத்தை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மாத்திரம் வைப்பிலிடுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்வதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!