எயார்பஸ் கொள்வனவு நிதி முறைகேடு: நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணை

#SriLanka #today #Namal Rajapaksha #LANKA4 #Case #purchase #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
1 hour ago
எயார்பஸ் கொள்வனவு நிதி முறைகேடு: நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் வழக்கு விசாரணை இன்று (23) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!