கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை - மீனவர்கள் மறு அறிவிப்புவரை கடலுக்கு செல்ல வேண்டாம்

#SriLanka #Fisherman #Warning #Sea #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை - மீனவர்கள் மறு அறிவிப்புவரை கடலுக்கு செல்ல வேண்டாம்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்காள விரிகுடாப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, 18.0° வடக்கு அட்சரேகை மற்றும் 84.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் அமைந்திருந்தது. 

இந்த அமைப்பானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு வேளையில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காற்றின் வேகமானது   அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இப்பகுதிகளில் கடல் நிலை மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கை நிலைமை காரணமாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை  கேட்டுக் கொண்டுள்ளது. 

இப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வரும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!