மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Judge #HighCourt #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

இலங்கையின் புதிய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நியமித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய நீதித்துறை சேவையின் விசேட தர அதிகாரி பெருமாள் சிவகுமார், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றிய ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!