ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் ‘பாபா’ முத்திரை – ரசிகர்கள் உற்சாகம்!
#India
#Cinema
#LANKA4
#rajini kanth
#Fans
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
59 minutes ago
நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்புற சுவரில், அவரது அடையாளமாகக் கருதப்படும் ‘பாபா’ முத்திரை சின்னம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த அபான முத்திரை, ரஜினிகாந்தின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாகவும் ரசிகர்களின் விருப்பமான குறியீடாகவும் இருந்து வருகிறது.
தற்போது வீட்டின் நுழைவாயில் பகுதியில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ‘பாபா’ முத்திரையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
இந்த புதிய மாற்றத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.