IMF பிரதிநிதிகளுடன் சஜித் பிரேமதாச சந்திப்பு!
#SriLanka
#Sajith Premadasa
#LANKA4
#IMF
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் IMF வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, IMF பிரதிநிதிகளுடன் பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கடன் நிலைத்தன்மை, வெளிநாட்டு கையிருப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரான பொருளாதார நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார மறுசீரமைப்புகளால் தொழிலாளர்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
வறுமை, வாழ்க்கைச் செலவு, குடும்ப வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களையும் கருத்தில் கொண்டு பொருளாதார மறுசீரமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.