ஈஸ்டர் தாக்குதலில் முழு நீதி கிடைக்கவில்லை - அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பகிரங்க குற்றச்சாட்டு
#Prison
#Easter Sunday Attack
#LANKA4
#Justice
#HighCourt
#L4
Prasu
2 hours ago
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு ஓரளவுக்கு மட்டுமே நீதியை வழங்கியுள்ளதாக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்குத் தண்டனை கிடைக்கும் போதே முழுமையான நீதி நிலைநாட்டப்படும் என்று அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி முழுமையடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.