ஈஸ்டர் தாக்குதல் - நிரபராதி சிறையில் இறப்பு: என்ன நஷ்ட ஈடு?

#Death #Prison #Easter Sunday Attack #LANKA4 #prisoner #compensation #L4
Prasu
2 hours ago
ஈஸ்டர் தாக்குதல் - நிரபராதி சிறையில் இறப்பு: என்ன நஷ்ட ஈடு?

2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 25 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 10 பேர் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு அதில் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் விளக்கமறியலில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் புதிய காத்தான்குடி, விடுதி வீதியைச் சேர்ந்த மர்ஹூம் யாசின் பாவா அப்துல் ரஊப் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த நபருக்கு நஷ்ட ஈடு ஏதும் வழங்கப்படுமா? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!