வேல்ஸில் பயிற்சி விமானம் விபத்து - 2 பிரிட்டிஷ் இராணுவ விமானிகள் காயம்
#Flight
#Accident
#Hospital
#LANKA4
#Wales
#L4
Prasu
2 hours ago
வடக்கு வேல்ஸில் விபத்துக்குள்ளான ஒரு பயிற்சி விமானத்திலிருந்து வெளியேறிய இரண்டு ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிள்சி தீவில் உள்ள RAF வேலி தளத்திலிருந்து பறந்து கொண்டிருந்த ஹாக் T2 ரக விமானம், பென்கார்னிசியோக் அருகே விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், “இரண்டு விமானிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிய சேதங்கள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை” என்று வடக்கு வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹாக் T2 என்பது RAF பயன்படுத்தும் ஒரு பயிற்சி விமானமாகும், அதேசமயம் RAF வேலி என்பது விமானி பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஆங்கிள்சி தீவில் உள்ள ஒரு இராணுவ விமானத் தளமாகும்.