அனோஜனை காப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி - மாலத்தீவிடம் உதவி கோரல்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராஜ அனோஜன் வழக்கில் தலையிடுமாறு இந்திய உயர் ஆணையகத்தையும், அமெரிக்க தூதரகத்தையும் இலங்கை தமிழ் அரசு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று (23) பிற்பகல் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றக்கோரி, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஃபைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் உபுல் குமாரப்பெரும ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் நேற்று மாலத்தீவுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை சந்தித்து, சம்பந்தப்பட்ட இலங்கையரைக் காப்பாற்ற தலையிடுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.