நில்வள நதிப் படுக்கையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
#SriLanka
#Warning
#Flood
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
59 minutes ago
நில்வள நதிப் படுக்கையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நீர்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெதர, அகுரெஸ்ஸா (Akuressa), அதுராலியா (Athuraliya), மலிம்படா (Malimbada), கம்பருபிட்டிய, திஹாகொட ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியூடாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.