இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முதலாவது தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை ஒக்டோபர் 1 முதல் அறிமுகம்

#SriLanka #LANKA4 #Launch #system #customs #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
1 hour ago
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முதலாவது தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை ஒக்டோபர் 1 முதல் அறிமுகம்

இலங்கை சுங்கத் திணைக்களம் தனது முதலாவது தாளில்லா (Paperless) சுங்கப் பிரகடன முறைமையை வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளது.

இது சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக சமூகத்திற்கான சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

புதிய முறைமையின் மூலம் சுங்கப் பிரகடனங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை மின்னணு முறையில் (Electronically) சமர்ப்பிக்கவும் பரிசீலிக்கவும் முடியும்.

இதனால் காகித ஆவணங்களின் பயன்பாடும், கைமுறை செயல்பாடுகளும் வெகுவாகக் குறையும். இந்தத் திட்டம் மூலமாக ஆவணச் செயலாக்கங்கள் விரைவுபடுத்தப்படுவதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத் தாமதங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டர் அடிப்படையிலான சுங்கக் கட்டுப்பாடுகள், வருமானப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றாடல் நட்பு ரீதியிலான பணிச்சூழலுக்கும் இது வழிவகுக்கும்.

இந்தப் புதிய டிஜிட்டல் முறைமை ஒக்டோபர் 1 ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்படவுள்ளது.

சுங்க அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுக்கள், அரசாங்க நிறுவனங்கள், வர்த்தக சமூகம், சுங்கத் தரகர்கள் மற்றும் தளவாடப் போக்குவரத்துத் துறைப் பங்காளிகளின் பங்களிப்புடனேயே இந்தத் திட்டம் சாத்தியமாகியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!