குழந்தைகளிடையே டிஜிட்டல் திரைகளன் பயன்பாடு அதிகரிப்பு - வைத்தியர்கள் கவலை

#SriLanka #children #doctor #Warning #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
குழந்தைகளிடையே டிஜிட்டல் திரைகளன் பயன்பாடு அதிகரிப்பு - வைத்தியர்கள் கவலை

இலங்கையில் முன்பள்ளிப் பருவக் குழந்தைகளிடையே டிஜிட்டல் திரைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

64 சதவீதக் குழந்தைகள் நாளொன்றுக்கு 30 நிமிடங்களுக்கும் மேலாக அலைபேசிகள் அல்லது கணினிகளைப் பயன்படுத்துவதாக ஆய்வொன்று வெளிப்படுத்தியதை தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், சிறு குழந்தைகளிடையே திரைப் பயன்பாடு மற்றும் பிற அன்றாடப் பழக்கவழக்கங்கள் குறித்த வளர்ந்து வரும் கவலைகளை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுவதாக கூறினார். 

சிறு குழந்தைகளுக்கான திரைப் பயன்பாட்டு நேரத்தை நாளொன்றுக்கு 30 நிமிடங்களுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். 

சுமார் 32 சதவீதக் குழந்தைகள் நாளொன்றுக்கு 10 முதல் 11 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதாகவும், அதேவேளை சுமார் 43 சதவீதக் குழந்தைகள் திரையைப் பயன்படுத்திக்கொண்டே உணவருந்துவதாகவும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!