ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் - சாரதிகளின் கவனத்திற்கு
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, பத்தரமுல்லையில் உள்ள தியத உயன (Diyatha Uyana) பகுதிக்கு அருகிலுள்ள பொல்டுவ சந்தி மற்றும் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று (24) காலை 9.00 மணிக்கு பொல்டுவ சந்தியில் இந்தப் போராட்டத்தைத் தொடங்க SJB திட்டமிட்டிருந்தது.
22 ஆவது திருத்தமானது சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கக்கூடும் என்று குறிப்பிட்டே இந்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்திருந்தது.
மேலும், இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, நாடாளுமன்றம் மற்றும் பொல்டுவ சந்திக்குச் செல்லும் சாலைகள் உட்பட அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.