பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை பாடசாலைகளில் சேர்க்க நடவடிக்கை
#SriLanka
#School
#children
#LANKA4
#certificate
#Birth
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
2 hours ago
குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சில சிறுவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், பாடசாலைகளில் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி, பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையிலும் சிறுவர்களை அருகிலுள்ள பாடசாலைகளில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நீண்டகாலமாக கல்வியைத் தொடராத சிறுவர்களுக்கான கல்வி இடைவெளியை குறைக்க விசேட கல்வித் திட்டங்களும், அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனையும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.