கிளிநொச்சியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்
#SriLanka
#Death
#Accident
#Kilinochchi
#LANKA4
#L4
Prasu
1 hour ago
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார்.
பரநதன் பூநகரி பிரதான வீதியில் நாவல்ப்பழ வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
பலியாகிய சிறுவன் கிளிநொச்சி உருத்திரபுரம் - எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்சன் என்ற சிறுவனே விபத்தில்பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.