நாமல் ராஜபக்சவுக்கு லஞ்சம் வழங்கிய க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கைது

#SriLanka #ARREST #Women #Namal Rajapaksha #LANKA4 #Bribery #L4
Prasu
1 hour ago
நாமல் ராஜபக்சவுக்கு லஞ்சம் வழங்கிய க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்ட பிறகே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

க்ரிஷ் நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை 'டிரான்ஸ்வொர்க் சதுக்கம்' (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!