ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்மட்டக் குழுவினர் பாராளுமன்றில் சந்திப்பு

#SriLanka #Parliament #Level #LANKA4 #UAE #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்மட்டக் குழுவினர் பாராளுமன்றில் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரின் தனிப்பட்ட அலுவலகத்தின் (முதலீடுகள்) தலைவர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறைகளில் முன்னுரிமைகளை இனங்கண்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், நிபுணத்துவம் மிக்க பணியாளர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பணியாளர்களை உருவாக்குவதற்காக இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு நடைமுறை அறிவுடன் கூடிய உயர்தர தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இளைஞர், யுவதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் பயிற்சித் தரநிலைகளுக்கு அமைவாக திறன்மிக்க உள்நாட்டுப் பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தமது விருப்பத்தை ஐக்கிய அரபு அமீரகக் குழுவினர் இதன்போது தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!