கம்பஹாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி

#LANKA4 #SriLanka #President #LANKA4 #Public #President #AnuraKumaraDissanayake #Public #AnuraKumaraDissanayake #Gampaha #Gampaha #ADDA #ADDA #ADDAADS #ADDAADS #SHELVA #SHELVA #ADDAFLY #ADDAFLY #ADDAPOOJA #ADDAPOOJA
Riya
1 hour ago
கம்பஹாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, “மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் பலம். 

அனைவருக்குமான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் மக்கள் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) கம்பஹாவில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இப்பேரணி, அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியின் நேரலை ஒளிபரப்பும் அதே நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணித் தொடரின் ஒரு கட்டமாகவே இந்த கம்பஹா பேரணி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன், பெருமளவான பொதுமக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே தொனிப்பொருளின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னதாக மக்கள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!