மழை காரணமாக மண்சரிவு அபாயம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

#SriLanka #Rain #LANKA4 #Warning #landslide #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
3 hours ago
மழை காரணமாக மண்சரிவு அபாயம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குயில்வத்தை பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.

இதற்கிடையில், மவுசாகலை மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களில் தலா இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், கென்யன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!