முன்னாள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பிணை!

#SriLanka #LANKA4 #Ministry #Bail #Religion #cultural #affairs #Secretary #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
முன்னாள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் புத்தகங்களை அச்சிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 47 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!