தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது

#Colombo #Death #ARREST #Attack #Dehiwala #LANKA4 #Bomb #L4
Prasu
1 hour ago
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது

செப்டம்பர் 11 அன்று தெஹிவளையில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். 

இத்தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் பிலியந்தலை மற்றும் கஹதுடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் ஆகும்.

இக்குற்றச் செயலின் முக்கிய சூத்திரதாரி மற்றும் இரு உடந்தையாளிகள் ஏற்கனவே செப்டம்பர் 17 அன்று ரிதீமலியத்த, தெஹிவளை மற்றும் பொரலெஸ்கமுவ ஆகிய காவல் பிரிவுகளில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று தெஹிவளை காவல் பிரிவில் இந்த இரு உடந்தையாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் 11 கிராம் 960 மில்லிகிராம் அளவிலான போதைப்பொருள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!