சிவராசா அனோஜன் விவகாரம் - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்த காவிந்த ஜயவர்தன

#SriLanka #LANKA4 #European union #SaudiArabia #L4 #SivarasaAnojan #DeathPenalty
Prasu
3 hours ago
சிவராசா அனோஜன் விவகாரம் - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்த காவிந்த ஜயவர்தன

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரத்தில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக ஆங்கில மற்றும் தமிழ் ஊடக செயலாளரும், அரசியல் தொடர்பாடல் அதிகாரியுமான ஏ.ஜி.நளீர் அஹமட் ஆகியோருக்கும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே காவிந்த ஜயவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அவ்வாறே, நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மாகாண சபை தேர்தல் விரைந்து நடத்தப்பட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாகாண சபை குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதேசங்களின் பௌதீக அபிவிருத்தியிலும் பிற முன்னேற்றங்களிலும் வகிக்கும் முக்கியத்துவம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!